வருட இறுதியில் பொதுமக்களுக்கு அதிக நிவாரணம்

இந்த வருட இறுதியில் பொதுமக்களுக்கு அதிக நிவாரணங்கள் வழங்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர் தெரிவித்த சில கருத்துகள்.

மக்கள் மின்சார கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட ஏனைய விலை அதிகரிப்புகளால் வாழ்க்கைச் செலவுகளை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்.நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடினமான தீர்மானங்கள் பல மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.குறுகிய காலத்துக்கு மக்கள் அதனைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.இந்த வருட இறுதியில் மின்சார கட்டண குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்க முடியும்.

Please follow and like us: