பண்டிகைக்காலத்தில் பொருட்களின் விலைகள் குறையும் – அமைச்சர் அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் தெரிவித்த சில கருத்துகள்

இந்த நேரத்தில், இறக்குமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வர்த்தகர்களுக்கும் இதே நிலைதான். இறக்குமதியாளர்கள் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலையைக் குறைத்து நிவாரணம் வழங்குகிறார்கள். விலை அதிகரிக்கும் போதும் அதே போல் விலை குறையும் போதும், ​​​இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இதன் பலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறோம். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுவதால் வாடிக்கையாளருக்கு அதிக நன்மை கிடைக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நாட்களில், நுகர்வோர் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும்.

Please follow and like us: