துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மருந்துப்பொருட்கள்!

இந்திய கடன் உதவித்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப்பொருட்கள் வரி செலுத்தாமையால் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினாலோ அல்லது சுங்கத்தினாலோ அவ்வாறான தடுப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரசாங்கம் மருந்துகளுக்கு வரி அறவிடுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்துகளை விரைவில் வெளியிட அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும், ஆவணங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் அவை விடுவிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Please follow and like us: