பதவி விலகுகிறார் மயந்த திஸாநாயக்க

பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மயந்த திஸாநாயக்க(SJB) அறிவித்துள்ளார்.

இதனை விரைவில் சபாநாயகருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்படவிருந்த நிலையில், அரச தரப்பு உறுப்பினர்களின் ஆதரவுடன் மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டார்.

இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், எதிர்க்கட்சியில் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

இந்த நிலையிலேயே அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

Please follow and like us: