பங்களாதேஷில் பாரிய தீ – 12,000 பேர் நிர்க்கதி  

பங்களாதேஷின் தெற்கு மாவட்டமான கொக்ஸ் பஜாரில் அமைந்துள்ள ரோஹிங்கிய அகதிகள் முகா‍மொன்றில் ஞாயிற்றுக்கிழமை பாரியத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 12,000 பேர் குடியிருப்புகளை இழந்து, நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அதிர்ஷ்டவசமாக அனர்த்தத்தில் எந்த உயிரிழப்புகளும் இதுவரை பதிவாகவில்லை என்று கூறப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் நடந்து வருகின்றன.

குடியிருப்புகளை இழந்தவர்களுக்கு உணவு மற்றும் தற்காலிக தங்குமிடங்களை வழங்க அதிகாரிகள் சர்வதேச மற்றும் உள்ளூர் மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

Please follow and like us: