கொட்டகலை பாரிய தீ விபத்து 2 கடைகள் நாசம்  

கொட்டகலை நகரில் நேற்றிரவு (5) ஏற்பட்ட திடீர் தீ பரவல் சம்பவத்தில் 2 கடைகள் முற்றாக எரிந்து நாசமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கொட்டகலை நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள தளபாட வர்த்தக நிலையம் ஒன்றில் குறித்த தீ ஏற்படும் போது வர்த்தக நிலையத்தில் எவரும் இல்லாததால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தீயை கட்டுப்படுத்த பிரதேசவாசிகள், இரானுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து பாரிய பிராயத்தனத்தினை மேற்கொண்ட போதிலும் தீ வேகமாக பரவியது.

தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், உரிய நேரத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் வராமையே பாரிய சேதத்துக்கான காரணம் என, பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் சேத விபரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும் திம்புல்ல-பத்தனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us: