மசகெண்ணெய் விலையில் பாரிய சரிவு

உலகளாவிய ரீதியாக அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரெண்ட் மசகு எண்ணெய், 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து ஒரு பீப்பாய் $72.39 ஆக பதிவாகியுள்ளது.

இது 2021 டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பதிவான அதிகூடிய விலை வீழ்ச்சியாகும்.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் ஒரு பீப்பாய்க்கு 5 சதவிகிதத்திற்கும் மேலாக குறைந்து $67.06 ஆக பதிவாகியுள்ளது.

ரொய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கிரெடிட் சூயிஸ் பற்றிய கரிசனைகள் உலகளாவிய சந்தைகளை அச்சத்துக்குள்ளாக்கியமை இதற்கான பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.

கிரெடிட் சூயிஸின் மிகப்பெரிய பங்குதாரரான சவுதி நேஷனல் வங்கி (SNB) மேலும் ஒத்துழைப்பை வழங்க முடியாது என்று அறிவித்ததை அடுத்து, அதன் பங்குகள் புதன்கிழமை 30 சதவீதம் சரிந்தன.

Please follow and like us: