மொரட்டுவவில் பாரிய வெடிவிபத்து

மொரட்டுவ கல்தெமுல்ல பிரதேசத்தில் குப்பைக் குவியலுக்கு தீ வைக்கச் சென்றபோது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த தம்பதியின் மகள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டாளரின் தாயும் தந்தையும் தமது வீட்டுக்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் குழி தோண்டி தீ வைத்ததாகவும், அங்கு பாரிய வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் பெண்ணின் இடுப்பு மற்றும் கைகளிலும், அவரது கணவனின் கால்களிலும் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Please follow and like us: