பெருந்தொகையான வாகன உதிரிப்பாகங்கள் அழிப்பு

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான வாகன உதிரிப்பாகங்கள் சுங்கத் திணைக்களத்தினால் இன்று (20) அழிக்கப்பட்டன.

இவை விடுவிக்கப்பட்டால் உள்நாட்டில் தரமற்ற வகையில் அமைக்கப்பட்ட வாகனங்கள் சந்தைக்குள் விற்பனைக்குச் செல்லக்கூடும் என்ற அடிப்படையில் அவை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நூற்றுக் கணக்கான வாகன உடல் பகுதி மற்றும் ஏனைய உதிரிப்பாகங்கள் அழிக்கப்பட்டதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவை கடந்த 5 ஆண்டுகளில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us: