மார்ச் 1ஆம் திகதி மாபெரும் போராட்டம் – நாட்டையே முடக்க திட்டம்

மார்ச் 1ஆம் திகதி மாபெரும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துறைமுகங்கள், எரிபொருள், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இந்த பணிப்புறக்கணிப்பில் இலங்கை மத்திய வங்கியின் தொழில் நிபுணர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளை  நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதா இல்லையா? என்பதை இன்று (28) அறிவிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Please follow and like us: