தேர்தலை நடத்தாது பிற்போடுவதற்கு சூழ்ச்சிகள்

தேர்தலை நடத்தாது பிற்போடுவதற்கான சூழ்ச்சிகள் இப்போதும் இடம்பெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துகள் :-

  • தேர்தல் நடைபெறுமா? என்பதில் இப்போதும் ஐயம் இருக்கிறது.
  • தேர்தலுக்கான நிதி ஒதுக்கம் குறித்து இன்னும் அரசாங்கம் உறுதியான பதிலை வழங்கவில்லை – ஜனாதிபதியும் எதனையும் தெரிவிக்கவில்லை.
  • நீதிமன்ற உத்தரவின்படி தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி இப்போதும் தொடர்கிறது.
  • எந்த வகையிலாவது தேர்தலை நடத்தவிடாது செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது.
  • இதுதொடர்பாக சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
  • தேர்தலை பிற்போடுவதற்கான எந்த முயற்சிகளையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.
Please follow and like us: