பாதையைக் கடக்கையில் தொலைப்பேசி பாவித்ததால் காதை வெட்டிய நபர் – பதுளையில் அதிர்ச்சி  

பாதையைக் கடக்கும் போது கைப்பேசியில் பேசிக் கொண்டு சென்ற இளைஞர் ஒருவரது காதை வெட்டியெறிந்த சம்பவம் ஒன்று பதுளை – மெட்டிகஹதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வலது குறைந்த குறித்த இளைஞர் பாதையைக் கடக்கும் போது அவருக்கு வந்த கைப்பேசி அழைப்புக்குப் பதிலளித்துள்ளார்.

இதனைக் கண்ட மற்றுமொரு நபர் அவரிடம் இருந்த கத்தியை எடுத்து அவரது காது மடலை வெட்டியெறிந்ததுடன், அவரை கீழே தள்ளி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் உடனடியாக அந்த பகுதியிலிருந்தவர்களால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

காதை வெட்டியெறிந்த சந்தேக நபரைத் தேடி மடுல்சீமை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Please follow and like us: