நோர்வூட் பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த இளைஞன் கைது

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சென்.ஜோன் டிலரி பகுதியில் துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸாரும் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு (13) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த தெரியவருவதாவது,
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த நபரின் வீட்டை சோதனையிட்ட போது துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் காலி பூசாலை இராணுவ முகாமில் கடமையாற்றியுள்ளதோடு, இராணுவத்தில் இருந்து விலகி ஏழு மாதங்கள் கடந்துள்ளதோடு இரண்டு வருடங்கள் இராணுவ முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ்பிரிவைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இந்நிலையில் நேற்று சந்தேகநபர் அட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சம்வம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.