உள்ளாட்சி தேர்தல் – உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்போம் என அரசு உறுதி

தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அரசாங்கம் மதிக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சனிக்கிழமை (4) தெரிவித்தார்.

அதன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இலங்கையின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (3) நாட்டின் நிதிச் செயலாளர் உள்ளிட்டோரை, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க எடுத்துக்கொண்டதை அடுத்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு எதிர்வரும் மே 26ஆம் திகதி மீண்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Please follow and like us: