உள்ளாட்சி தேர்தல் | அஞ்சல் வாக்களிப்பு திகதிகள் மாற்றப்படும் நிலை

நடக்குமா? என்ற ஐயத்துக்கு உட்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்புகள் இம்மாதம் 28ஆம் திகதி முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த தினங்களில் அஞ்சல் வாக்களிப்புகளை நடத்துவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது.
தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்கு இம்மாத இறுதிக்குள் 1.1 பில்லியன் ரூபாவை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
அதில் பாதியை எதிர்வரும் புதன்கிழமைக்குள் அரசாங்கம் வழங்கவில்லை என்றால், அஞ்சல் வாக்களிப்பு தினங்களை புதிதாக அறிவிக்க நேரும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா, சண்டேடைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்மாதம் 20ஆம் திகதிக்குள் 1.1 பில்லியன் ரூபாய் நிதியை நிதியமைச்சு வழங்கவில்லையாயின், நீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.