உள்ளூராட்சி தேர்தல் – நீதிமன்ற விசாரணை இன்று

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (23) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நாளை (24) கூடி முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, தேவையான வாக்குச் சீட்டுகளை அரச அச்சகம் வழங்காததால், தேர்தல் தொடர்பான தபால் வாக்குப்பதிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Please follow and like us: