ஆணையாளர்கள் வசம் செல்லவுள்ள உள்ளூராட்சி மன்றங்கள்  

19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெயர் கூற விரும்பாத அரச உயர்மட்ட அதிகாரி ஒருவர் அயவரி செய்திகளுக்கு இந்தத் தகவலை வழங்கினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரக்காலம் ஏற்கனவே ஓராண்டுக்கு நீடிக்கப்பட்ட நிலையில், அந்த காலம் இம்மாதம் 19ஆம் திகதிடன் நிறைவுக்கு வருகிறது.

அவற்றுக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், அது நடைபெறுமா? என்ற ஐயம் நிலவுகிறது.

இந்த நிலையில் வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்படும் எனவும், இது தொடர்பாக பிரதமர் தலைமையில் சகல மாகாண ஆளுநர்களும் இன்று (14) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதாகவும் குறித்த அதிகாரி அய்வரியிடன் கூறினார்.

Please follow and like us: