சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதம்

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நேற்று (24) நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த கடிதம் நேற்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: