பணமும் பாதுகாப்பும் கோரி அரச அச்சக மா அதிபர் கடிதம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் மற்றும் பாதுகாப்பினை வழங்குமாறு அரசாங்க அச்சக மா அதிபர் கங்கானி லியனகே கோரியுள்ளார்.
இது தொடர்பான கடிதங்கள் நிதி அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகத்தில் கையளிக்கப்பட்டதாக ஹிரு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வாக்குச் சீட்டு அச்சிடும் காலப்பகுதியில் பகலில் 35 பொலிஸ் உத்தியோகத்தர்களும், இரவில் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தேவைப்படுவதாக அச்சக அலுவலக பிரதானி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறும் நிதியமைச்சின் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Please follow and like us: