யாசகம் பெறும் பெண்ணின் குழந்தை கடத்தல்

யாசகம் பெறும் பெண்ணொருவரின் ஒன்றரை வயது குழந்தையை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் வனாத்தவில்லு பகுதியில் நேற்றிரவு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்ட ஆண் குழந்தையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையை கடத்துவதற்கு உதவிய தரகர் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட நால்வரும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யாசகம் பெறும் பெண் கொம்பனி வீதியில் வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்தபோது

சந்தேக நபரான குறித்த பெண், குழந்தையை கடத்தியதுடன் வாடகை வாகனத்தில் வனாத்தவில்லுவைக்கு சென்றுள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் முச்சக்கர வண்டியை சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கண்டுபிடித்ததுடன், சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

Please follow and like us: