சத்திர சிகிச்சைக்கு உள்ளானார் ஜஸ்ப்ரிட் பும்ரா

இந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா நியூசிலாந்தில் சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அவரது முதுகின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் கிரிக்கட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
இறுதியாக அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டிருந்தாலும், காயத்தினால் விலகினார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நியூசிலாந்தில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் சிலகாலம் நியூசிலாந்திலேயே தங்கி இருப்பார் என்றும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவர் பயிற்சிகளை ஆரம்பிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதற்குத் தயாராகும் வகையில் அவர் ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.