யாழ். தாவடியில் வாகனம் திருத்துமிடத்தில் தீ விபத்து

யாழ்ப்பாணத்தில் தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகனம் திருத்துமிடம் தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதோடு, பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது.
வாகனம் திருத்துமிடத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தற்பொழுது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
Please follow and like us: