அது ‘மம்மி’ அல்ல.. ஜூவானிட்டா எனது ஆன்மீக காதலி..

பெரு நாட்டில் மத்திய கடற்கரை பகுதியான லிமா பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள புனோ பகுதியை சேர்ந்த ஜூலியோ சிசர் பெர்மேஜா என்ற 26 வயதான வாலிபர் வீட்டில் மம்மி ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அவரது வீட்டில் ஒரு பைக்குள் இருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து ஜூலியோ சிசர் பெர்மேஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த மம்மியை ‘ஜூவானிட்டா’ என்று பெயர் சொல்லி அழைத்தார்.

மேலும் ஜூவானிட்டா எனது ஆன்மீக காதலி போன்றவர் என கூறிய அவர், அவள் என் அறையில் இருக்கிறாள், அவள் என்னுடன் தூங்குகிறாள். நான் அவளை கவனித்து கொள்கிறேன் என்றார். மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை இந்த மம்மியை வீட்டுக்கு கொண்டு வந்ததாகவும் ஜூலியோ சிசர் பெர்மேஜா கூறினார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us: