மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும்   

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் நிலையிருப்பதாக இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டிருந்தால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

மின்வெட்டை நிறுத்தியதன் விளைவு எதிர்காலத்தில் தெரியும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இம்மாத நடுப்பகுதியுடன் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மின்வெட்டினை அமுலாக்காமல் தொடர்ச்சியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணித்திருந்தார்.

அதன்படி தற்போது நாட்டில் முன் திட்டமிட்ட மின்தடை அமுலாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: