எரிபொருட்களின் விலை குறைவடையும் சாத்தியம்!

எதிர்வரும் வாரங்களில் உள்நாட்டுச் சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதாவது,

அண்மைய நாட்களில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் எரிபொருட்களில் விலைகள் குறைவடையும் சாத்தியம் காணப்படுகின்றது.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு பண வீக்கத்தைக் குறைக்கும். அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைவடையும்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் எதிர்காலத்தில் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என்றார்.

Please follow and like us: