இம்ரான்கானுக்கு பிடியாணை – இடைநீக்கம் செய்த இஸ்லாமாபாத் நீதிமன்றம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றம் இடை நீக்கம் செய்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் கடந்த ஆண்டு நடந்த பேரணியின் போது பெண் நீதிபதிக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) தலைவர் இம்ரான் கானை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனால் இம்ரான்கான் அடுத்த 24 மணிநேரத்திற்குள் இஸ்லாமாபாத் பொலிஸாரால் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இம்ரான்கானுக்கான பிடியாணை உத்தரவினை செவ்வாய்க்கிழமை மத்திய தலைநகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் மார்ச் 16 வரை இடைநீக்கம் செய்தது.

பிடியாணைக்கு எதிராக இம்ரான்கான் நீதிமன்றை அணுகிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: