அவுஸ்திரேலியாவில் ஈரான் முன்னெடுத்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

அரசியல்வாதிகள் கல்விமான்கள் சமூக தலைவர்கள் போன்றவர்களை இலக்குவைக்கும வெளிநாடுகளின் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவில் அதிகமாகியுள்ளன என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் கிளாரா ஓ நெய்ல்  இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாஙகம் முன்னெடுக்கவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் வெளிநாடுகளை அம்பலப்படுத்தப்போவதாகவும் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை இலக்குவைத்து ஈரான் முன்னெடுத்த நடவடிக்கையை அவுஸ்திரேலியாவின் புலனாய்வு பிரிவினர் முறியடித்தனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரான் அவுஸ்திரேலிய பிரஜையொருவரின் வீட்டை வேவுபார்த்த நபர்களின்  நடவடிக்கையை அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவினர் முறியடித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபர்கள் ஈரான் அவுஸ்திரேலிய பிரஜையின் வீட்டை வேவுபார்த்தனர் குடும்பஙகளை பின்தொடர்ந்தனர் எனவும்  உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் புலனாய்வு பிரிவினர் அவற்றை உடனடியாக முறியடித்தனர் எனவும்  உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளின் தலையீடு அவுஸ்திரேலியாவில் ஆழமானதாக வளர்ந்துவருவதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் இதுவும் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிழலில் இயங்கும் நாடுகளிற்கு நாங்கள் ஒரு விடயத்தை தெரிவிக்கின்றோம்  நாங்கள் உங்களை கண்காணித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதே அது எனவும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: