வட்டி வீதங்கள் அதிகரிப்பு – மத்திய வங்கி அதிரடி

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் காரணமாக மார்ச் 03 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொள்கை விகிதங்களை 100 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதன்படி துணை நில் வைப்பு வீதம் 15.5 சதவீதமாகவும், துணை நில் கடன் வீதம் 16.50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் இறுதிக்கட்டத்துடன் முன்னேறுவதற்கு அனைத்து ‘முன் செயல்களையும்’ நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் உள்ளது.

IMF பணிக்குழாம் மட்ட உடன்பாட்டின் அடிப்பையில் கொள்கை வட்டி விகிதங்களை சிறிய அளவில் உயர்த்த இணக்கம் காணப்பட்டது, என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Please follow and like us: