சமையல் எரிவாயு விலை தொடர்பாக LITRO தலைவர் வழங்கிய தகவல்

சமையல் எரிவாயுவுக்கான விலைசூத்திரத்தின் பிரகாரம் நாளை நள்ளிரவுடன் விலை அதிகரிக்கப்படும் நிலை உள்ளது.
ஆனால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், விலை அதிகரிப்பை மேற்கொள்ளாதிருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஷ் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான செய்திகள் வெளியாக்கப்பட்டு வரும் நிலையில், முதித்த பீரிஷை அய்வரி செய்திகள் தொடர்பு கொண்டு வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், டொலர் விலை குறைவடையும் நிலையில், அதன் பலனை மக்களுக்கு வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், விலை அதிகரிக்கப்பட வேண்டி இருந்தாலும் மக்களின் நலன் கருதி விலையேற்றத்தை அமுலாக்காமல் இருக்கும் எண்ணத்திலிருப்பதாகவும், எனினும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் அய்வரி செய்திகளுக்கு கூறினார்.