ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவமனை தலைமை அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவமனைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவரான பேராசிரியை மேகனா பண்டிட், அந்த நாட்டின் மிகப் பெரிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையான ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக மருத்துவமனைகளின் அறக்கட்டளை நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022 ஜுலை மாதம் முதல், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக மருத்துவமனைகளில் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக பேராசிரியை மேகனா பண்டிட் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

கடுமையான மற்றும் போட்டிகளை கடந்து தற்போது நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியாக பேராசிரியை மேகனா பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவமனை அறக்கட்டளையின் முதல் பெண் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: