இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை | வடக்கு MPகளும் மீனவர்களும் கூட்டுத்தீர்மானம்

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்குமாகாண மீனவசங்க பிரதிநிதிகள் கூட்டாக  அறிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் குறித்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளுடனான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த  வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்த போதும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

இந்த கலந்துரையாடலில், இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்களை அனுமதிப்பதில்லை என்ற கூட்டுத்தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மனுவொன்றை இந்தியாவுக்கு வழங்கவும் முடிவுசெய்யப்பட்டது.

Please follow and like us: