மாசி 5, 2023

தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இன்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடி 228 ஓட்டங்களைப் பெற்றது.

சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களைப் பெற்றார்.

229 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 16.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அர்ஸ்தீப் சிங் இந்தியா சார்பில் 20 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி இந்திய அணி 91 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

Please follow and like us: