மாசி 5, 2023

67 ஓட்டங்களால் வென்றது இந்தியா

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி இலங்கைக்கு 50 ஓவர்களில் 374 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

பதிலளித்தாடிய இலங்கை அணி முக்கிய விக்கட்டுகளை விரைவாக இழந்த போதும், பத்தும் நிசாங்க வலுவாக செயற்பட்டார்.

பின்னர் களமிறங்கிய அணித் தலைவர் தசுன் ஷானக, ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் உம்ரான் மாலிக் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

Please follow and like us: