ஏற்றுமதி, இறக்குமதி செலவினங்கள் அதிகரிப்பு

கப்பல் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்து செய்யப்பட்டமையால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு அதிக செலவுகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்றுமதி போட்டித்தன்மையும் பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வர்த்தமானி ரத்து செய்யப்பட்டமை, விதிமுறைகளுக்கு புறம்பாக பொருட்கள் சேவைகளின் விலைகளை நிர்ணயம் செய்ய வழிவகுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please follow and like us: