மின்கட்டண அதிகரிப்பு – அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்

இந்த மாதம் 15ம் திகதி முதல் மின்வெட்டினை அதிகரிப்பதற்கு உத்தேசித்திருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர பாராளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

இதற்கான அனுமதியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்கட்டணத்தை உயர்த்தாததன் காரணமாகவே தற்போது மின்விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 15ம் திகதியே மின்சார கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டிருந்த போதும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: