ஏலத்தில் விற்கப்படவுள்ள இறக்குமதியான எழில்சாதன பொருட்கள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களின் சில பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து இவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவை நல்ல தரமான தயாரிப்புகள் என்பதால் குறித்த பொருட்கள் பரிசோதிக்கப்பட்டு இலங்கையின் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் காணப்படுபவை உள்ளூர் சந்தையில் ஏலம் விடப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Please follow and like us: