GCE (O/L) பரீட்சை பற்றிய பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் தாமதிக்கின்ற நிலையில், ஏனைய பரீட்சைகளும் தாமதிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான அறிவிப்பு ஒன்றை பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் மேலும் தாமதிக்குமாக இருந்தால், சாதாரண தர பரீட்சையையும் அது பாதிக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையானது, மே மாதம் 15ம் திகதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் இது பிற்போடப்படும் நிலைமை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Please follow and like us: