வங்கிகள் மேற்கொண்ட முக்கியத் தீர்மானம்

பல கடனட்டை வழங்கும் வங்கிகள் இதுவரை வெளிநாட்டு கொடுப்பனவுகளுக்கு இருந்த வரம்புகளை நீக்கியுள்ளன.

கடந்த ஆண்டு நாட்டின் அந்நியச் செலாவணி நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டபோது, ​​கடன் அட்டைகளை வழங்கிய வங்கிகள், வெளிநாட்டு கொடுப்பனவுகளை செலுத்தும் அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு தினசரி வரம்புகளை விதித்தன.

தற்போது வங்கிகளின் வெளிநாட்டு நாணய இருப்பு சமீப காலங்களில் கணிசமாக மேம்படுவதை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரம்புகள் நீக்கப்பட்டாலும், ​​அந்நியச் செலாவணியில் தங்கள் கடன் மற்றும் டெபிட் அட்டைகளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும், பிட்கொய்ன் போன்ற மெய்நிகர் நாணய பரிவர்த்தனைகள் தொடர்பான கொடுப்பனவுகள் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கைக்கு வெளியே பந்தயம், விளையாட்டு மற்றும் சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவுகள், அட்டைகள் ஊடாக செலுத்தப்படலாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: