IMF உடன்படிக்கை பாராளுமன்றில் | ஜனாதிபதி அதிரடி

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கை பாராளுமன்றில் முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கிங்ஸ்பெரி ஹொட்டலில் நடைபெற்ற வரி மன்ற மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இந்த உடன்படிக்கை முன்வைக்கப்பட்டதும், அதனை அங்கீகரிக்கவோ, அல்லது நிராகரிக்கவோ பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்ற தரப்பினருக்கு இயலுமை இருக்கிறது.

அது நிராகரிக்கப்படுமாக இருந்தால் அதற்கு மாற்றீடான திட்டம் ஒன்றை அதனை நிராகரித்த தரப்பு சர்வதேச நாணய நிதியத்திடம் முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Please follow and like us: