இந்தூர் ஆடுகளம் தொடர்பில் ஐ.சி.சி. மோசமான தகவல்

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டிக்காக பயன்படுத்தப்பட்ட இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானம் ஐ.சி.சி. ஆடுகள மற்றும் அவுட்ஃபீல்ட் கண்காணிப்பு செயல்முறையின் கீழ் மோசமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் இன்று மாலை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் விளைவாக ஹோல்கர் கிரிக்கெட் மைதானம் மூன்று குறைபாடு புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மூன்றாவது போட்டியின் போது வீழ்ந்த 31 விக்கெட்டுகளில் 26 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களால் வீழ்த்தப்பட்டன, நான்கு விக்கெட்டுகள் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களால் வீழ்த்தப்பட்டது. ஒருவர் ரன்-அவுட் ஆனார்.

இரண்டே நாட்களில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆடுகளம் சீரற்ற வேகம் மற்றும் பவுன்ஸ் காரணமாக நிபுணர்களிடமிருந்து நிறைய விமர்சனங்களைப் பெற்றது.

இதனால் போட்டியின் நடுவர் கிறிஸ் பிராட், இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Please follow and like us: