பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்  

பல்கலைக்கழக மாணவர்களது அண்மைய போராட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி 2023 மார்ச் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சூழ நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் மார்ச் 08 ஆம் திகதி களனிப் பல்கலைக்கழகத்தைச் சுற்றி நடைபெற்ற போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் 13 அன்று நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us: