வரலாற்றின் கடுமையான பொருளாதார வீழ்ச்சி பதிவு!

2022ஆம் ஆண்டின் இந் நாட்டின் பொருளாதாரம் 7.8% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இலங்கை வரலாற்றில் ஒரு வருடத்தில் ஏற்பட்ட அதிகூடிய பொருளாதார வீழ்ச்சியாக கருதப்படுகிறது. முன்னதாக 2020 இல், இலங்கையின் பொருளாதாரம் 4.6% வரை வீழ்ச்சியடைந்திருந்தது.

2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இலங்கைப் பொருளாதாரம் 16.3% வீழ்ச்சியைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 12.4% எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவுசெய்தது, இது இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த எதிர்மறையான வளர்ச்சி விகிதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை வௌியிட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Please follow and like us: