கிண்ணியாவில் பெரும்போக அறுவடையில் பாரிய நஷ்டம்

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் அங்கே விளைச்சல் குறைவாக உள்ளதாகவும், நெல்லுக்கான உத்தரவாத விலை இல்லாததாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் வெட்டுக் கூலி, டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல இன்னல்களை தாம் எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கிண்ணியா சூரங்கல், கற்குழி பகுதியில் தற்போது இயந்திரம் மூலமான அறுவடை இடம்பெறுகிறது.

இச்சந்தர்ப்பத்தில் போதுமான உரமானியம் கிடைக்காமை முதலிய பல குறைபாடுகள் காணப்படுவதால் இம்முறை மஞ்சள் நோய்த்தாக்கம் ஏற்பட்டு விளைச்சலின்மை பெரும் நஷ்டத்தை உண்டாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் விவசாயிகளின் விடயத்தில் கரிசனை காட்டி தங்களுக்கு உதவுமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Please follow and like us: