தேர்தல்கள் ஆணைக்குழு தனது வகிபாகத்தை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதா ?  

தேர்தல்கள் ஆணைக்குழு தனது வகிபாகத்தை உரிய முறையில் நிறைவேற்றி உள்ளதா என்பதை பாராளுமன்றமும் சகல மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புடன் ஆராய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்பட முடியாவிட்டால், எந்தவொரு  வெளிநாட்டுடனும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாது போகும்.

இதனால்,  ஒட்டு மொத்த வர்த்தக கட்டமைப்பும் வீழ்ச்சியடையக்கூடும் என வஜிர அபேவர்தன மேலும் குறிப்பிட்டார்.

சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையின் எதிர்க்கட்சிகள் அல்லது தனிநபர்கள் எவரும் முன்மொழிவுகளையோ அல்லது மாற்று முன்மொழிவுகளையோ சமர்ப்பிக்கவில்லை.

இலங்கை வர்த்தக சபை மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின்  ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றதும், அது குறித்த அறிக்கையொன்றை பராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதனை அங்கீகரிப்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ எவருக்கும் உரிமை உண்டு. அவ்வாறு உரிமை இருக்கின்றபோதிலும், சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியாவிட்டால் அது  சீர்குலைக்கும் செயலாகும்” என்றார்.

Please follow and like us: