ஹரக் கட்டாவும் குடு சலிதுவும் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படுகின்றனர்  

மடகஸ்காரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக்கட்டா எனப்படும் நதுன் சிந்தக மற்றும் குடு சாலிது எனப்படும் சலிது மல்ஷிதா ஆகியோர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அவர்களை அழைத்து வருவதற்காக இலங்கையில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று மடகஸ்கார் சென்றிருந்தது.

ஹரக்கட்டா மற்றும் குடு சலிது ஆகியோர் பெப்ரவரி 12ஆம் திகதி மடகஸ்காருக்கு தனியார் ஜெட் விமானம் மூலம் சென்ற போது, சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையின்படி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹரக்கட்டாவின் மனைவியும் அவரது தந்தையும் அடங்குவர்.

Please follow and like us: