கொழும்பில் மாபெரும் போராட்டம்

அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக 40 தொழிற்துறை தொழிற்சங்கங்கள் இணைந்து புதன்கிழமை (22) கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளன.
நாளை அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் ஒன்று கூடுவார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Please follow and like us: