வரி விதிப்புகளை மீளாய்வு செய்யவுள்ள அரசு

வரிவிதிப்பு சதவீதத்தை மறுபரிசீலனை செய்து தேவையான திருத்தங்களை விரைவில் மேற்கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

தொழிற்சங்கத் தலைவர்களை சந்தித்த போது, ஜனாதிபதியின் பணிக்குழாம் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, ​​வருமான வரிக்கு எதிராகவும், அதனை திரும்பப் பெறக் கோரியும் இன்றும் (8) நாளையும் (9) தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கவனத்தில் கொள்ளுமாறு தொழிற்சங்கத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்த சாகல ரத்நாயக்க, அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய முக்கியமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் அவர்களிடம் கோரினார்.

மேலும், வரி விதிப்பினால் தொழில் வல்லுநர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அரசாங்கம் புரிந்துள்ளதாகவும் இந்த விடயத்தை அரசாங்கம் மீளாய்வு செய்து தேவையான திருத்தங்களை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Please follow and like us: