தேர்தலில் போட்டியிடச் சென்ற அரச பணியாளர்கள் சிக்கலில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பல அரச பணியாளர்கள் ஊதியம் இல்லாத விடுப்பு பெற்றுள்ளனர்.

ஆனால் தேர்தலுக்கு காலதாமதம் ஏற்படவுள்ள நிலையில், அவர்களுக்கு மூன்று மாத காலத்துக்கு சம்பளம் வழங்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் அடிப்படையில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்கள் அவர்கள் ஊதியம் இல்லாத விடுமுறையில் இருக்க வேண்டும்.

எனவே அவர்களுக்கு 3 மாதங்களுக்கு வேதனம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us: