கோர விபத்து – இருவர் பலி!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்க பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையான பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்திருந்தாக தெரிவிக்கின்றன.

Please follow and like us: