ஐரோப்பாவில் தொழில் தேடுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இத்தாலியில் 82,702 தொழில் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அல்லாதவர்களுக்கு 82,702 தொழில் வாய்ப்புகளை இத்தாலி வழங்குகிறது.
பருவகால தொழிலாளர்கள், பருவநிலை அல்லாத தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
டிரக் சாரதிகள், மின்சார பணியாளர்கள், இயந்திர இயக்குனர்கள் ஆகியோரும், கட்டுமானம், ஹோட்டல், உணவகம், கடற்படை, சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் அனுபவ மிக்கவர்களும் பொருத்தமான தொழிலுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கான விண்ணப்பங்களை 2023 மார்ச் 27 காலை 9 மணி முதல் https://www.anpal.gov.it/assumere-lavoratori-non-comunitari-anno-2023 என்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்.